சுக்கினி கூட்டு
0
தேவையான பொருட்கள்:
சுக்கினி (Zucchini) - ஒன்று வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - கால் தேக்கரண்டி அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை
எண்ணெய் - தாளிக்க உப்பு
செய்முறை:
சுக்கினியை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
சுக்கினியுடன் பச்சை மிளகாய்
உப்பு
மஞ்சள் தூள்
சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
அதில் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம்
சோம்பு தூள்
மிளகாய் தூள்
கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்க்கவும்.
சுவையான சுக்கினி கூட்டு தயார். விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கலாம்.