சீ ஃபுட் நூடுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எக் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் முட்டை - 3 கணவாய் - ஒன்று இறால் - 5 சுரீமி ஸ்டிக் - 5 குடை மிளகாய் - ஒன்று கேரட் - ஒன்று பீன்ஸ் - 10 முட்டைகோஸ் - கால் கப் வெங்காயம் - ஒன்று வெங்காயத் தாள் - ஒரு கட்டு இஞ்சி - கால் அங்குலத் துண்டு பூண்டு - 5 பற்கள் சோயா சாஸ் - அரை மேசைக்கரண்டி ஃபிஷ் சாஸ் - அரை மேசைக்கரண்டி சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி ஆயிஸ்டர் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் மெல்லியதாக நீளமாக வெட்டிக் கொள்ளவும். கணவாய்

இறால்

சீ ஃபுட் ஸ்டிக் ஆகியவற்றையும் தேவையான அளவில் வெட்டி வைக்கவும். எண்ணெய் தடவிய நாண் ஸ்டிக் பேனில் முட்டையை அடித்து ஸ்க்ரம்பில்டு செய்து தனியே வைக்கவும்.

நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். அத்துடன் அரை மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு ஃபோர்க்கினால் நன்றாக கலந்துவிடவும். (ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்).

நாண் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும் இஞ்சி

பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தீயை அதிகரித்து

பீன்ஸ்

முட்டைகோஸ் சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் கேரட்

குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். (தீயை அதிகரித்து 3 நிமிடங்கள் மட்டும் வதக்குவதால் காய்கறிகள் முழுவதும் வேகாமல் க்ரஞ்சியாக இருக்கும்).

வதக்கிய காய்கறிகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.

அதே நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி

நறுக்கி வைத்துள்ள கணவாய்

இறால்

மற்றும் சுரீமி ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

அத்துடன் வதக்கிய காய்கறிகள் மற்றும் ஸ்க்ரிம்பில்டு முட்டை ஆகியவற்றைச் சேர்த்து

மிளகு பொடி மற்றும் வெங்காயத் தாள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு சாஸ் வகைகளைச் சேர்க்கவும்.

இரண்டு கைகளிலும் ஒவ்வொரு ஃபோர்க்கை பிடித்துக் கொண்டு நூடுல்ஸ் நொறுங்கிவிடாதபடி அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

எண்ணெய் குறைவான

டேஸ்டி & க்ரஞ்சி நூடுல்ஸ் தயார்.

குறிப்புகள்: