சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - அரை கப் துருவிய சீஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

மைதாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவை போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை வட்ட வடிவில் அப்பளங்களாக திரட்டிக் கொள்ளவும்.

சீஸ் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து வைக்கவும்.

திரட்டிய அப்பளத்தை அரை வட்ட வடிவில் பாதியாக கத்தியால் வெட்டி ஒரு பக்கத்தில் சீஸ் ஸ்டஃபிங் வைக்கவும்

மறுபக்கத்தால் மூடிவிட்டு ஓரங்களை ஒரு ஃபோர்க்கினால் அழுத்தி விடவும்.

பூரிகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டஃப்ட் பூரி தயார். இதனுள்ளே சீஸ் மற்றும் சர்க்கரை இரண்டும் உருகி கலந்திருப்பது நல்ல சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: