சீஸ் கேசடீயா (Cheese Quesadilla)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வீட் or கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla)

சீஸ் கலவை - 1 கப்

(பார்மஜான், மொற்சரில்லா, செடார்)

உப்பு

ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப்

எண்ணெய்

செய்முறை:

ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

அதன் அரைவாசிக்கு சீஸ் துருவலை பரப்பி உப்பு தூவி அதன் மேல் சிறிது ஹலபீனோவை வைத்து பரப்பி மறு பாதியால் மூடவும்.

திரும்பவும் தோசைக்கல்லிற்கு எண்ணெய் தடவி ரோர்டியாவைப் போட்டு இரு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும். (சீஸ் உருகும்வரை)

சுவையான சீஸ் கேசடீயா தயார். இதை அப்படியே சாப்பிடலாம்.

குறிப்புகள்:

ஹலபீனோ ஊறுகாய்கு பதிலாக பச்சை மிளகாய் அல்லது மிளகாய் ஊறுகாய் போட்டும் செய்யலாம். மெக்சிகன் முறயில் ஹலபீனோதான் பாவிப்பார்கள். ஹலபீனோ என்பது ஒரு வகை மிளகாய். மிகவும் காரமானது. மெக்சிகன் உணவில் அதிகம் பயன்படுத்துவார்கள்