சீஸ் கேசடீயா





தேவையான பொருட்கள்:
வீட் அல்லது கார்ன் டோர்டில்லா - 4 (Wheat / Corn tortilla) சீஸ் கலவை - ஒரு கப் (பார்மஜான்
மொற்சரில்லா
செடார்) உப்பு - தேவையான அளவு ஹலபீனோ ஊறுகாய் - கால் கப் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீஸ் கலவையை எடுத்துக் கொண்டு
அதனுடன் ஹலபீனோ ஊறுகாயைச் சேர்த்துக் கலக்கவும்.
டோர்டில்லாவை தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
சுட்டு எடுத்த டோர்டில்லாவின் ஒரு பாதியில் சீஸ் கலவையை பரப்பி உப்பு தூவி
மறு பாதியால் மூடவும்.
மீண்டும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி டோர்டில்லாவைப் போட்டு இரு பக்கமும் திருப்பிப் போட்டு சீஸ் உருகும் வரை சுட்டு எடுக்கவும்.
சுவையான புளிப்பும்
சீஸும் கலந்த சீஸ் கேசடீயா (Cheese Quesadilla) தயார். இதை அப்படியே சைட் டிஷ் ஏதுமின்றி சாப்பிடலாம்.