சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 12 முதல் 14 க்ரீம் சீஸ் - ஒரு பாக்ஸ் (8 oz) மயோனைஸ் - கால் கப் க்ரஷ்டு பைனாப்பிள் டின் - ஒன்று புதினா இலை - சிறிது
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். க்ரீம் சீஸை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.
பைனாப்பிள் டின்னை திறந்து
தேவையான அளவு பழத்துண்டுகளை எடுத்து
ஒரு வடிக்கட்டியில் போட்டு
அதில் இருக்கும் நீரை/பழச்சாறை நன்கு வடியவிடவும். (தேவையெனில் லேசாக அழுத்தம் கொடுத்து வடித்து எடுத்தால்
பிறகு சீஸ் கலவை நீர்த்து போகாமல் இருக்க உதவும்). புதினா இலைகளை கழுவி நன்றாக துடைத்து
மெல்லியதாக வெட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸுடன் மயோனைஸ் போட்டு
நன்றாக குழைத்து
அதை இரண்டு கிண்ணங்களுக்கு மாற்றவும். அதில் ஒரு கிண்ணத்தில்
பைனாப்பிள் துண்டுகளையும்
மற்றொரு கிண்ணத்தில்
புதினா இலைகளையும் சேர்க்கவும்.
பின்னர் அவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு ப்ரெட் துண்டுகளின் ஓரத்தை நறுக்கிவிட்டு
இந்த ஃபில்லிங்கை வைத்து நிரப்பி
மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும். விருப்பமான வடிவங்களில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான
மிக சுலபமான
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈசி க்ரீம் சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ் ரெடி. இதை மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கி
பார்ட்டிகளுக்கு நல்ல ஸ்டார்டராக கொடுக்கலாம்.