சீனி சம்பல் பான் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டா மா (கோதுமை மா) - 2 கப் பட்டர்மில்க் - ஒரு கப் பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு சீனி சம்பல் - ஒரு கப்

செய்முறை:

ஆட்டா மாவினை சலித்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சீனி சம்பலை செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். சீனி சம்பல் செய்முறை அறிய

ஒரு பாத்திரத்தில் சலித்த ஆட்டா மாவு

பட்டர் மில்க்

பேக்கிங் பவுடர்

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர் மாவினை எடுத்து தோசைக் கல்லில் அல்லது நாண்ஸ்டிக் பானில் ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

பிறகு ஒவ்வொரு தோசையின் மீதும் ஒரு கரண்டி சீனி சம்பலை வைத்து தோசை முழுவதும் பரவும்படி தேய்த்துவிடவும்.

இதுவே குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பான் கேக்கிற்கு பீனட் பட்டரை (peanut butter) தடவிக் கொள்ளவும்.

சீனி சம்பல் தடவிய தோசையையும்

பட்டர் தடவிய தோசையையும் நான்காக மடித்து தட்டில் வைத்து பரிமாறவும். இதற்கு பக்க உணவு எதுவும் தேவையில்லை.

குறிப்புகள்: