சீனிச்சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 4 (பெரியது) உள்ளி/பூண்டு - 4 பல் இஞ்சி - சிறிய துண்டு கறிவேப்பிலை - 2/3 நெட்டு பட்டை - ஒரு துண்டு கிராம்பு - 5 ஏலக்காய் – 5 பச்சை மிளகாய் - 2 செத்தல் மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி சீனி (ப்ரவுன் சீனி) - ஒரு மேசைக்கரண்டி மாசிக்கருவாடு (சீவியது) - ஒரு மேசைக்கரண்டி புளி - 1/2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்

பூண்டு

இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்

பட்டை

கிராம்பு

ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு

இஞ்சி

பச்சை மிளகாயை சேர்த்து மேலும் ஒரிரு நிமிடங்கள் வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி வெந்ததும் மாசிகருவாடு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடிக்கடி கிளறினால் வெங்காயம் குழைந்து விடும்.

மாசிகருவாடு சேர்த்து 4-5 நிமிடங்கள் கழித்து செத்தல் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

வெங்காயம் நன்கு வெந்து பொரிந்தது போல் ஆனதும் புளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் சீனியை சேர்த்து ஒரிரு நிமிடங்கள் நன்கு வதக்கி விட்டு இறக்கி வைத்து விடவும்.

சுவையான சீனி சம்பல் தயார். காரம் அதிகம் விரும்புபவர்கள் இன்னும் சிறிது செத்தல் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: