சிம்பிள் ஸ்பகடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பகடி - 1/2 பாக்கட் (1/2 lb) தக்காளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி உள்ளி - 4 பல்லு ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி ஸ்பகடி மிக்ஸ் - 3 தேக்கரண்டி பேசில் இலை - 5 உப்பு - சிறிது

செய்முறை:

3/4 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுள் உப்பு

ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்

ஸ்பகடியை உடையாமல் போட்டு அவித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு சீவல்களாக வெட்டிய உள்ளியைப் போட்டு வதக்கவும்.

பின்னர் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுள் ஸ்பகடி அவித்த தண்ணீர் 1/4 கப்

உப்பு

ஸ்பகடி மிக்ஸ் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொதிக்க வைக்கவும். கலவை நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

கலவை (sauce) கெட்டியானதும் அதில் அவித்த ஸ்பகடியை போட்டு 3 நிமிடங்களுக்கு கிளறி பின்னர் இறக்கவும்.

இப்போது பேசில் இலைகளை கிள்ளிப் போட்டு கிளறவும்.

சுவையான ஸ்பகடி தயார். விரும்பினால் சீஸ் தூவியும் பரிமாறலாம்.

குறிப்புகள்: