சிப்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - ஒரு கிலோ சீனி - 500 கிராம் வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி விரும்பிய கலர் - தேவையான அளவு பட்டர் அல்லது மாஜரீன் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு பிஸ்கட் அச்சு உப்பு - ஒரு பின்ச்

செய்முறை:

மைதா மாவை இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்திருக்கும் ஒரு பகுதி மைதா மாவை போட்டு அதனுடன் விருப்பமான கலர்

உப்பு

2 தேக்கரண்டி மாஜரின் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் நகச்சூட்டளவு சுடுதண்ணீரை ஊற்றி சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து உருட்டி வைக்கவும்.

அதே போல் மீதமுள்ள மாவையும் செய்து வைக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியாக மூடி வைக்கவும்.

பலகையில் எண்ணெய் தடவி ஓரளவு பெரிய உருண்டையாக மாவை எடுத்து வைத்து உருளையால் மெல்லிய தடிப்பாக உருட்டி விரும்பிய அச்சினால் வெட்டவும்.

பின்பு ஒரு பிளேட்டில் எண்ணெய் தடவி நறுக்கின உருவங்களை எடுத்து வைக்கவும். மீதமுள்ள மாவை எடுத்து திரும்பவும் உருட்டி வெட்டி எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின உருவங்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். நெருப்பின் அளவைக் குறைத்து வைத்துப் பொரிக்கவும். வெட்டிய மாவு உலரும் முன்பு பொரித்து எடுக்க வேண்டும். அப்படியே எல்லாவற்றையும் செய்து பொரித்து எடுத்து அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் சீனியைக் கொட்டி கரைத்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு நுரையாக பொங்கி வரும்

அப்போது ஒரு துளியை தண்ணீரில் விட்டுப் பார்த்தால் கரையாமல் இருக்கும். அதுவே சரியான பதம்.

உடனே இறக்கி பொரித்து வைத்த சிப்பியின் மேல் ஊற்றி உடனே குலுக்கி குலுக்கி விட்டு கலந்து விடவும். (சிறிது நேரம் ஆனால் கட்டியாகிவிடும். அதனால் ஒருவர் பாகை ஊற்ற மற்றவர் பாத்திரத்தை குலுக்கி குலுக்கிக் கலக்க வேண்டும்.)

சுவையான சிப்பி தயார். நன்கு ஆறிய பின்பு டப்பாவில் போட்டு வைத்து ஒரு மாதம் வரை வைத்துச் சாப்பிடலாம். இந்த சிப்பி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: