சின்னமன் ரோல்
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப் கலந்து அடிக்க : பால் - முக்கால் கப் சர்க்கரை - கால் கப் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - ஒரு தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய் - கால் மேசைக்கரண்டி ஈஸ்ட் செய்ய: ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி சர்க்கரை - ஒரு தேக்கரண்டி வார்ம் வாட்டர் - கால் கப் ஃபில்லிங் செய்ய : வெண்ணெய் - கால் கப் (அறை வெப்பநிலையில் உருக்கியது) சர்க்கரை - கால் கப் நாட்டு சர்க்கரை - முக்கால் கப் சின்னமன் (பட்டை) பொடி - அரை தேக்கரண்டி க்ளேஸ் செய்ய : பால் - 2 தேக்கரண்டி பவுடர் சுகர் - தேவைக்கு பிரஷ் செய்ய : உருக்கிய வெண்ணைய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
இளம் சூடான நீரில் ஈஸ்ட்டையும்
ஒரு தேக்கரண்டி சர்க்கரையையும் போட்டு கலந்து வைக்கவும். 5 நிமிடத்தில் ஈஸ்ட் நுரை கட்டி இருக்கும்.
கலந்து அடிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்துக் கொள்ளவும். பின் அதில் நுரை கட்டிய ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவினை சேர்த்து நன்கு பிசுபிசுவென கையில் ஓட்டும் பதத்தில் பிசையவும். அதை பிளாஸ்டிக் கவரில் நன்கு முடி வார்மான இடத்தில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
இதன் இடையே ஃபில்லிங் செய்ய வேண்டிய பொருட்களில் வெண்ணெய் தவிர்த்து பொடி வகைகளை மட்டும் நன்கு கலக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்தால் இரு மடங்காக ஆகி இருக்கும்.
சிறிது உலர்ந்த மைதா மாவை தளத்தில் பிசிறி இரு மடங்கான மாவினை செவ்வகமாக தேய்த்து விரிக்கவும்.
ஃபில்லிங் செய்ய எடுத்து வைக்கப்பட்ட வெண்ணெயை தடவவும்.
பின் சின்னமன் பொடி கலவையை சீராக தூவவும்.
அதை கவனமாக அப்படியே உருட்டி முடியும் இடத்தில் அழுத்தி பொடி வெளி வராதபடி சீல் செய்யவும்.
பின் அதை சமமாக வெட்டவும்.
அவன் ட்ரேயில் அடுக்கி வெண்ணெயை கொண்டு பிரஷ் செய்யவும்.
350 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 25 நிமிடம் வைத்து பொன்னிறமாக ஆனதும் வெளியே எடுக்கவும். சுவையான சின்னமன் ரோல் ரெடி.