சிந்தி கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 3/4 கப் கடலை மாவு - கால் கப் வெண்டைக்காய் - கால் கிலோ உருளை - 3 கத்திரிக்காய் - ஒன்று காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது) பச்சை பட்டாணி - அரை கப் புளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 3 கடுகு

சீரகம்

பெருங்காயம்

வெந்தயம்

கலோஞ்சி

கறிவேப்பிலை - தாளிக்க எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள்

உப்பு - தேவையான அளவு மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை கழுவி நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி எடுத்து வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலை மாவு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும். சிவக்க தேவையில்லை.

வாசம் வந்ததும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் வேக வைத்து கடைந்து எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வதக்கிய காய்கறிகளை இதில் சேர்க்கவும்.

காய்கறிகள் வெந்ததும் புளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்து உள்ளதை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும். பிறகு மிளகாய்களை கிள்ளி போட்டு வதக்கி இறக்கவும்.

தாளிச்சத்தை கறியில் கொட்டி கிளறவும். கொத்தமல்லி தூவி சுடு சாதத்துடனோ அல்லது சப்பாத்தி

நாணுடன் பரிமாறவும். சுவையான சிந்தி (Sindhi) கறி ரெடி.

குறிப்புகள்: