சிக்கன் ஸ்டாக்
0
தேவையான பொருட்கள்:
கோழி எலும்புகள் - ஒரு கிலோ வெங்காயம் - ஒன்று (பெரியது) கேரட் - 2 செலரி - 2 மிளகு - ஒரு மேசைக்கரண்டி பிரிஞ்ஜி இலை (Bay leaves) - 5
செய்முறை:
கோழி எலும்பைக் கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு
அத்துடன் நறுக்கிய காய்கள் மற்றும் மிளகு சேர்த்து
2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் 4 மணி நேரங்கள் அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் பாதியாக வற்றும் வரை வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து
வற்ற வைத்த கோழிச் சாற்றை அதில் ஊற்றி வடிகட்டவும்.
சிக்கன் ஸ்டாக் தயார். சூப் வகைகளுக்குப் பயன்படுத்தலாம்.
நன்றாக வடிந்த பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி
ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.