சிக்கன் ஷவர்மா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஷவர்மா ரொட்டி / குபூஸ் / டார்டிலாஸ் - 2 எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - பாதி வெள்ளரிக்காய் - பாதி கேரட் - பாதி கோஸ் - சிறிது மயோனிஸ் / தயிர் - தேவைக்கு ஆலீவ் ஆயில் - சிறிது வினிகர் / எலுமிச்சை சாறு - சிறிது உப்பு ஊற வைக்க: தயிர் - 2 மேசைக்கரண்டி மிளகு தூள் - அரை - ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது - ஒரு பல் உப்பு தஹினி சாஸ் (Tahini Sauce) செய்ய: வெள்ளை எள் - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - சிறிது

செய்முறை:

சிக்கனுடன் ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்த்து கலந்து பிரட்டி 4 - 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த சிக்கனை க்ரில் செய்தோ (அ) தவாவில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்தோ எடுத்து சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும். (கொத்த வேண்டாம்).

காய்களை விரல் அளவு துண்டுகளாக்கி

உப்பு மற்றும் வினிகர் / எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற விடவும்.

கடாயில் எள்ளை பொரித்து (சிவக்க வறுத்து விட கூடாது) மிக்சியில் அதனை பொடிக்கவும். பின் 2 தேக்கரண்டி / தேவைக்கு சிறிது சிறிதாக வெஜிடபிள் ஆயில் சேர்த்து மயோனிஸ் பதத்திற்கு அரைக்கவும். தஹினி சாஸ் (Tahini Sauce) தயார்.

தயிர் பயன்படுத்தினால் அதனுடன் உப்பும்

மிளகு தூளும் கலந்து ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். மயோனிஸ் எனில் ஏதும் தேவை இல்லை. இப்போது ரொட்டியின் நடுவே உப்பு மற்றும் வினிகர் / எலுமிச்சை சாறில் ஊறிய காய்களை நீரின்றி பிழிந்து எடுத்து விரும்பும் அளவுக்கு வைக்கவும்.

அத்துடன் தஹினி சாஸ் வைக்கவும். விரும்பினால் சிறிது ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கூட வைக்கலாம்.

பின் தயிர் கலவை / மயோனிஸ் வைத்து சிக்கன் துண்டுகள் விரும்பும் அளவுக்கு வைக்கவும்.

விரும்பினால் மேலே சிறிது ஆலீவ் ஆயில் விடலாம். அடியில் சிறிது ரொட்டியை மடித்து ஸ்டஃபிங் மேல் மூடும் படி வைத்து பின் ஒரு பக்கம் இருப்பதை மடித்து சுருட்டவும்.

சுவையான சிக்கன் ஷவர்மா தயார். பொதுவாக கடைகளில் இதை பட்டர் பேப்பரில் சுற்றியே கொடுப்பார்கள். நான் அலுமினியம் ஃபாயிலில் சுற்றி இருக்கிறேன். சிந்தாமல் சாப்பிட

சுருட்டியது பிரியாமல் இருக்க இப்படி ஏதேனும் சுற்றி வைத்தால் நல்லது.

குறிப்புகள்: