சிக்கன் ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கி

கோழி சூப் கட்டி - 2 (maggi chicken cubes)

அரிசி - 1/2 படி

இஞ்சி பூண்டு விழுது - தே.அளவு

உப்பு - தே.அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து அதனுடன் 1 1/4 படி தண்ணீர் ஊற்றவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது,சிக்கன் க்யூப்,உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கோழி ஓரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

கோழியை தண்ணீரிலிருந்து எடுத்து விடவும்.

அந்த நீரை ஆற விடவும்.

அரிசியை கலைந்து அதில் கோழி தண்ணீர் 1 படி அளவு எடுத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரில் அரிசியை வேக விடவும்.

இப்போது சுவையான சிக்கன் ரைஸ் ரெடி.

வேக வைத்த கோழியை குருமாவும் செய்யலாம்,தேவையான மசாலாக்கள் போட்டு சிக்கன் ஃபிரையும் செய்யலாம்,குழம்பும் செய்யலாம்.

குறிப்புகள்:

அவரவர் பயன் படுத்தும் அரிசிக்கு தகுந்தார் போல் தண்ணீரின் அளவை மாற்றிக் கொள்ளவும்.சிக்கன் க்யூப் போடுவதால் உப்பின் அளவையும் கவனித்து போடவும்.