சிக்கன் பர்கர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்பு நீக்கியது - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

வெள்ளை மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட எல்லா பொருட்களையும் ஒன்றாக மைப்போல் அரைத்து கையில் எண்ணெய் தொட்டு தொட்டு உள்ளங்கையில் பரத்தி சிறிது எண்ணெய் காயவைத்து வறுத்து எடுக்கவும். நாமே வீட்டில் செய்யும் சத்தான சிக்கன் பர்கர் தயார்.

குறிப்புகள்:

சிக்கனை கழுவிய பின் நன்கு தண்ணீர் போக விட வேண்டும். இல்லையென்றால் கையில் தேய்க்க வராது ஃப்ரோசென் பர்கர்கள் வாங்குவதை விட மிக எளிமையாக வீட்டில் சுவையாக தயாரித்து விடலாம் பன்னில் பர்கர், மயோனைஸ், வெள்ளரி, லெட்டியூஸ் வைத்து சாப்பிடலாம்.