சிக்கன் நக்கேட்ஸ்
0
தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய கோழிக்கறி - அரைக் கிலோ பூண்டு தூள் - ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 ரொட்டித் தூள் - கால் கிலோ உப்பு - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு
அதனுடன் பூண்டு தூள்
மிளகுத் தூள்
ஆலிவ் ஆயில்
எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து வைக்கவும்.
சிக்கன் துண்டுகள் ஊறியதும் ஒவ்வொன்றாக எடுத்து
முட்டையில் தோய்த்து ரொட்டித் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் நக்கேட்ஸ் ரெடி. பிடித்தமான சாஸுடன் பரிமாறவும்.