சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. கோழி - 1/2 கிலோ

2. வெங்காயம் - 2

3. தக்காளி - 2

4. குடைமிளகாய் - 2

5. பச்சை மிளகாய் - 3

6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

8. மிளகு தூள் - 1 தேக்கரண்டி

9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

10. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

11. உப்பு

12. கொத்தமல்லி இலை

13. எண்ணெய் / வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

14. எலுமிச்சை சாறு - 3 மேஜைக்கரண்டி

15. மல்லி தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை சிறு துண்டுகளாக்கி எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா கலந்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் ஒன்றும் குடை மிளகாயும் சிறிது உப்பும் சேர்த்து வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

அதே பாத்திரத்தில் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள 1 வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் மல்லி தூள் சேர்க்கவும்.

பின் சிக்கன் சேர்த்து வதக்கி மூடி வேக விடவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும் வதக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் பிரட்டவும்.

கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி இலை தூவி சில நிமிடங்கள் பிரட்டி எடுக்கவும்.

குறிப்புகள்:

விரும்பினால் சிறிது சீரகம் தாளிக்கலாம். சீரக தூளும் சேர்க்கலாம். இந்த வகை சிக்கம் க்ரேவியாக இருக்காது, சற்று ட்ரை க்ரேவி போல் தான் இருக்கும். இதில் முக்கியமானது பச்சை மிளகாயும், மிளகும் தான். மிகவும் காரமான சிக்கன் வகை. சிலர் இதன் காரத்தை குறைக்க கடைசியாக க்ரீம் அல்லது மேரினேட் செய்யும் போதே சிறிது தயிரும் சேர்ப்பது உண்டு.