சிக்கன் சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய சிக்கன் நெஞ்சு சதை - 250 கிராம்

சோயாசாஸ் - ஒரு மேசைக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி

பூண்டுபல் - 3

பொரிப்பதற்கு - ஒரு தேக்கரண்டி எண்ணெய்

ஃபிரெஞ்சு பாக்கெட் Baguettes

கேரட் துருவியது - 3 தேக்கரண்டி

வெள்ளரி பிஞ்சு - அரை பாகம்

மையோனெஸ் - தேவையான அளவு

மல்லி இலை - சிறிது

செய்முறை:

முதலில் இறைச்சியை சுத்தம் செய்து வைக்கவும். பூண்டை தோல் உரிக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். இறைச்சி பூண்டைப்போட்டு மையாக அரைக்கவும்.

அத்துடன் உடைத்த மிளகு, தண்ணீர், சோளமாவு, சோயாசாஸ், ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசையவும. பிறகு உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை 3 அங்குல அகலம், 3 அங்குல உயரம், 8 அங்குல நீளத்திற்கு தட்டிக்கொள்ளவும். பின்பு இதை ஸ்டீமரில் வைத்து மூடி வேகவிடவும்.

நன்றாக வெந்தபின்பு எடுத்து, பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் லேசாக சிவக்க பொரித்து எடுக்கவும். இனி இதை மெல்லிய ஸ்லைஸாக வெட்டிக்கொள்ளவும்.

இனி சாண்ட்விச் தயார் செய்யும் முறை ஃபிரெஞ்சு ரொட்டியை தேவையான அளவில் கட் பண்ணிக் கொள்ளவும். அவரவற்கு விருப்பமான ரொட்டியில் அல்லது பிரெட்டில் செய்யலாம்.

வெள்ளரி பிஞ்சை மெல்லிய ஸ்லைஸாக வெட்டவும். மல்லிதழையை கழுவி கிள்ளி வைக்கவும்.

ரொட்டியை நடுவில் கீறி விடவும். இரண்டு புறமும் மையோனெஸ் தடவவும்.

வெள்ளரி பிஞ்சு மற்றும் கேரட்டை தூவவும். இனி அதில் வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை வைக்கவும். அதன் மேல் மல்லி இலையை வைக்கவும்.

விருப்பமானவர்கள் அதில் சிகப்பு தாய்லாந்து மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து மேலே தூவிக்கொள்ளலாம். இதுவே சிக்கன் சாண்ட்விச்.

குறிப்புகள்:

இந்த முறையில் இறைச்சியை செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், சாதத்துடனும் சாப்பிடலாம்.