சிக்கன் சாட்டே

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் தசைப்பகுதி - 500 கிராம் மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி உப்பு - அரை மேசைக்கரண்டி எலுமிச்சம் புளி - 3 மேசைக்கரண்டி தயிர் - 4 மேசைக்கரண்டி சாட்டே ஈர்க்குகள்

செய்முறை:

சிக்கனைச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகாய் தூள்

உப்பு

தயிர்

எலுமிச்சை புளி சேர்த்து பிரட்டி 4 அல்லது 5 மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விடவும்.

பின்னர் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து சாட்டை ஈர்க்குகளில் குத்தவும்.

விரும்பினால் செர்ரி

தக்காளி

வெங்காயம் இவற்றை சிக்கன் துண்டுகளுக்கு இடையில் சேர்த்து குத்தலாம்.

குத்திய ஈர்க்குகளை அவண் ட்ரேயில்

நெற் தட்டில் அடுக்கி

க்ரில் பண்ணவும். திருப்பி திருப்பி விட்டு க்ரில் செய்து ப்ரவுன் நிறமானதும் வெளியே எடுத்து விடவும். சிக்கனை க்ரில் செய்ய 350 F ல் வைத்து 25 - 35 நிமிடங்கள் தேவைப்படும். க்ரில் இல்லாதவர்கள் அவணிலும் வைத்து எடுக்கலாம்.

சுவையான சிக்கன் சாட்டே (chicken satay) தயார். இதன் மேல் பிரவுன் சாஸ் அல்லது தக்காளி சாஸ் ஊற்றிச் சாப்பிடவும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: