சிக்கன் கொத்து கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்பில்லாமல் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று பெரிது குடைமிளகாய் (3 கலர்களில்) - சிறிது மஷ்ரூம் - 5 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி உப்பு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

சிக்கன் துண்டுகளை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் போட்டு வேக விட்டு எடுத்து மிக்ஸியில் அல்லது ப்ளெண்டரில் ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.

தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்களை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.

காய் வதங்கியதும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

பின் கறியை சேர்த்து பிரட்டவும்.

கலவை நன்றாக கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.

இப்போது கொத்து கறி கலவை தயார். இதை ரொட்டி

தோசை போன்றவற்றின் உள்ளே வைத்து ரோல் செய்யலாம்.

இப்போது சுவையான சிக்கன் கொத்து கறி ரோல் தயார்.

குறிப்புகள்: