சாக்லெட் சுக்கினி ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுக்கினி (Zucchini) ‍துருவியது - ஒரு கப் ஆல் ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு - 1 1/2 க‌ப் வெண்ணெய் - ‍ அரை க‌ப் ச‌ர்க்க‌ரை -‍ ஒரு க‌ப் முட்டை - 2 வெனிலா எசன்ஸ் - ‍ஒரு தேக்க‌ர‌ண்டி பேக்கிங் சோடா ‍- அரை தேக்க‌ர‌ண்டி பேக்கிங் ப‌வுட‌ர் - ஒரு தேக்க‌ர‌ண்டி சின்னமன்/ப‌ட்டைத்தூள் (cinnamon) - அரை தேக்க‌ர‌ண்டி பேக்கிங் கோக்கோ - 3 மேசைக்க‌ர‌ண்டி உப்பு - ஒரு சிட்டிகை செமி ஸ்வீட் சாக்லெட் சிப்ஸ் - ‍ அரை க‌ப்

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். (குறிப்பு: எப்போதுமே

பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை

வெண்ணெய் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது.)

சுக்கினியை நன்கு கழுவி தண்ணீரை துடைத்து விட்டு

ஒரு கப் அள‌விற்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

பிறகு இதனுடன் 2 முட்டைகளையும் உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்து மிருதுவாக கலந்து வைக்கவும்.

வேறு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா

பேக்கிங் சோடா

பேக்கிங் பவுடர்

உப்பு

கோக்கோ பவுடர்

சின்னமன் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும்.

இப்போது இதில் ஏற்க‌ன‌வே அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் க‌ல‌வையை சேர்த்து ஒரு ஸ்பேட்சுலா அல்லது ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் ரொம்ப‌ அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம்

இல்லையென்றால் ப்ரெ‌ட்

மென்மைத்த‌ன்மை போய் க‌டின‌மாகிவிட‌ வாய்ப்பு உள்ள‌து.

அடுத்து

சாக்லெட் சிப்ஸ்

சுக்கினி துருவ‌ல் இர‌ண்டையும் இதனுடன் சேர்த்து ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய 8 x 4 x 2 இன்ச் அளவுள்ள ப்ரெட் பேனில் ஊற்றி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.

சுமார் ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்த‌தும் ஒரு டூத்பிக்கை உள்ளே விட்டு

அது சுத்தமாக மாவு ஏதும் ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்த்து

ப்ரெட் முழுவதுமாக வெந்துவிட்டதை உறுதி செய்துக் கொள்ளவும். பிறகு ப்ரெ‌ட்டை எடுத்து

க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌ விட‌வும்.

இங்கே நான் காண்பித்திருப்ப‌து

எலக்ட்ரிக் ப்ர‌ட் மேக்க‌ரில் பேக் செய்யும் முறை. இத‌ற்கு

மாவுக்க‌ல‌வையை அத‌ற்குண்டான‌ பாத்திர‌த்தில் ஊற்றி

'பேக் ஒன்லி' என்ற‌ ஆப்ஷ‌னை சூஸ் ப‌ண்ண‌வும். கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் ப்ரெ‌ட் ரெடியான‌தும்

எடுத்து

க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌விட‌வும். பிறகு வேண்டிய அளவில் நறுக்கி பரிமாறவும்.

சுவையான சாக்லெட் சுக்கினி ப்ரெ‌ட் த‌யார்! சாக்லெட் கலந்து செய்து இருப்பதால்

இது குழந்தைக‌ளுக்கு மிக‌வும் பிடிக்கும்! நமக்கும் அவ‌ர்க‌ளை காய் சாப்பிட‌ வைத்த‌ திருப்தியும் கிடைக்கும்!

குறிப்புகள்: