சாக்கோ ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவுட்டர் லேயர் செய்ய: ஏரோ ரூட் பிஸ்கட் (அ) மேரி (அ) பிரிட்டானியா பிஸ்கட் - அரை பாக்கெட் கோகோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி பவுடர் சுகர் - ஒரு தேக்கரண்டி பால் - சுமார் ஒரு கப் (அ) தேவைக்கு ஃபில்லிங் செய்ய: இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் - அரை தேக்கரண்டி ரூம் டெம்பரேச்சரில் வைத்த பட்டர் - கால் கப் பவுடர் சுகர் - அரை கப் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி வால்நட் - பொடித்தது

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பிஸ்கட்டை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி க்ரீம் பதத்தில் அடித்து தனியே வைக்கவும். வால்நட்டை மட்டும் தனியாக வைக்கவும்.

அவுட்டர் லேயர் செய்ய வேண்டிய கலவைகளை ஒன்றாக போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும்.

நன்கு ஒட்டாத பதத்தில் சப்பாத்தி மாவு போல வர வேண்டும்.

பின் அதை உருளையாக உருட்டி

ஃபாயில் பேப்பரில் திரட்டவும். மிகவும் மெல்லியதாக திரட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

காஃபி பட்டர் க்ரீமை அதன் மேலே வைத்து

கத்தியால் சமமாக தடவவும். பின் பொடித்த வால்நட்டை தூவி விடவும்.

அதை அப்படியே பக்குவமாக உருட்டி

பின் ஃபாயில் கொண்டு அதை சுருட்டி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின் அதை வட்டமாக வெட்டி பரிமாறவும். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவில் செய்ய கூடிய சாக்கோ ரோல் தயார். இதற்கு கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க் மெயிட் தேவை இல்லை. காஃபி க்ரீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

குறிப்புகள்: