சாக்கோ டிப்ட் ஸ்ட்ராபெரி
0
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெரி - 4 செமி ஸ்வீட்டன்ட் சாக்லேட் - 4 துண்டுகள் பால் - ஒரு தேக்கரண்டி பவுடர்ட் சுகர் - 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
மைக்ரோ வேவ் கப்களில் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு நிமிடம் அவனில் வைத்து உருக்கிக் கொள்ளவும்
பின் ஸ்ட்ராபெரியை சாயித்தபடி டிப் செய்து சுற்றவும்.
எல்லா ஸ்ட்ராபெரிகளையும் முக்கி வேக்ஸ் பேப்பரில் அரை மணி நேரம் வைக்கவும்.
பாலில் சர்க்கரையை சேர்த்து கலந்தால் வெண்மையான பாகு கிடைக்கும்.
அதை டிப் செய்த ஸ்ட்ராபெரியில் கிளேஸ் போன்று தடவி சுகரை தூவவும். சுவையான சாக்கோ டிப்ட் ஸ்ட்ராபெரி ரெடி.