சாக்கலேட் ஃபட்ஜ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாக்கலேட் சிப்ஸ் - 1 1/2 கப்

பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

சுகர் - 1 1/2 கப்

நட்ஸ் - 1/2 கப்

மார்ஸ் மால்லோஸ் (marshmallows) - 2கப்

evaporated milk - 2/3 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

சுகர், பட்டர், மில்க் எல்லாம் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்..சுகர் கரைந்து கெட்டியாகும் வரை சூடுபடுத்தவும்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு வெனிலா எசன்ஸ், சாக்கலேட் சிப்ஸ், மார்ஸ்மால்லோஸ் எல்லாம் சேர்த்து அவை கரையும் வரை நன்றாக கலக்கவும், இதனுடன் நட்ஸூம் கலந்து கொள்ளவும்

பின் அதை ஒரு அலுமினிய தட்டில் கொட்டி 2மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும், பின் எடுத்து துண்டுகள் போடவும் (துண்டுகள் போட வரவில்லையெனில் இன்னும் 2மணிநேரம் வைக்கலாம்

குறிப்புகள்:

சாக்கலேட் சிப்ஸ்க்கு பதில் நாம் சாப்பிடும் மில்க் சாக்கலேட் கூட உபயோகபடுத்தலாம், ஆனால் சுகர் 1கப் உபயோகபடுத்தவும், நட்ஸ் பிடிக்காதவர்கள் விட்டுவிடலாம்.