சாகோ புட்டிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடி ஜவ்வரிசி - அரை கப் சர்க்கரை - கால் கப் ரோஸ் எஸன்ஸ் - அரை தேக்கரண்டி (அ) பந்தன் எக்ஸ்ட்ராக்ட் - சிறிது கலர் - சில துளிகள் வெண்ணெய் - சிறிது தேங்காய் துருவல் - அரை கப்

செய்முறை:

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற விடவும்.

பின் நீரை முழுவதும் வடித்து விட்டு கலர் மற்றும் எஸன்ஸ் சேர்த்து வைக்கவும்.

சர்க்கரையுடன் கால் கப்பிற்கு சற்று கூடுதலாக நீர் விட்டு கொதிக்க விடவும். பந்தன் இலை சேர்ப்பதாக இருந்தால் இந்த நிலையில் பந்தன் இலையை போட்டு கொதிக்க விடலாம்.

சர்க்கரை கரைந்து சற்று கொதித்ததும் ஜவ்வரிசியில் ஊற்றி கலக்கவும்.

ஸ்டீம் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு கலவையை ஊற்றி பரப்பி விடவும். குக்கரில் நீர் விட்டு அதில் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். நீர் போகாமல் இருக்க சிறு சிறு ஓட்டைகளிட்ட அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடலாம்.

விசில் இல்லாமல் குக்கரை மூடி அதிக தீயில் 15 - 20 நிமிடம் வேக வைக்கவும். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வந்ததும் எடுத்து ஆற விடவும்.

தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.

சுவையான சாகோ புட்டிங் தயார்.

குறிப்புகள்: