சவர்மா சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை வினிகர் - அரை கப் (50 மில்லி)

கத்திரிக்காய் - இரண்டு

வெள்ளரிகாய் - ஒன்று

சிவப்பு முள்ளங்கி - ஒன்று

பச்சை மிளகாய் - நான்கு

உப்பு - ஒரு தேக்கரண்டி

பச்சை ஆலிவ் காய் - ஆறு

செய்முறை:

காய்களை வட்ட வடிவமாகவும், சதுரவடிவமாகவும் நறுக்கி கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் போட்டு உப்பு, வெள்ளை வினிகர் சேர்த்து ஏழு நாள் குலுக்கி விட்டு ஊற வைத்து பிறகு எடுத்து சாப்பிடவும்.

குறிப்புகள்:

வெளிநாடுகளில் சவர்மா ரொம்ப பிரசித்தம் அதனுடன் சாப்பிட சாலட் கொடுப்பார்கள். இதையும் ட்ரை செய்து பாருங்கள். மெயினா கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்ல புளிப்பாக இருக்கும் வாய்க்கு ருசிப்படும்

இது நாம் வடு மாங்காய் ஊற வைப்பது போல். சவர்மா என்றில்லை எல்லா வகையான உணவுகளுக்கும் சாப்பிடலாம்.