சவர்மா
தேவையான பொருட்கள்:
சவர்மா ரொட்டி செய்ய: மைதா மாவு - ஒரு கப் பால் - அரை கப் முட்டை - ஒன்று வெண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி சீனி - அரை தேக்கரண்டி ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சவர்மா செய்ய: மயோனைஸ் - கால் கப் எலும்பில்லாத கோழி - கால் கிலோ துருவிய காரட் - அரை கப் துருவிய முட்டைகோஸ் - அரை கப் துருவிய வெங்காயம் - முக்கால் கப் தக்காளி - ஒன்று புதினா
மல்லி - ஒரு கைப்பிடி எலுமிச்சை - பாதி இஞ்சி
பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி வெள்ளை மிளகு தூள் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
சவர்மா செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கோழியுடன் இஞ்சி
பூண்டு விழுது
சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து பின் அதை கொத்தி (அ) உதிரியாக்கிக் கொள்ளவும்.
சவர்மா செய்ய எடுத்து வைத்துள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். தக்காளியை விதை நீக்கி பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அனைத்து காய்களும் மயோனைசுடன் நன்கு சேர்ந்து இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் சிறிது மயோனைஸ் மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
சவர்மா ரொட்டி செய்வதற்கு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
ஈஸ்ட்டை சிறிது வெந்நீரில் கரைக்கவும். கரைந்ததும் அனைத்து பொருட்களையும் மாவுடன் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொஞ்சம் இளகலாக கையில் ஒட்டும் அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை காற்று புகாதவாறு மூடி 2 (அ) 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். நேரம் செல்லச் செல்ல மாவு உப்பலாகும். எனவே
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாவை கையால் அழுத்தி குத்தி விடவும்.
மாவு ஊறியதும் ஒட்டாமல் இருக்க தாராளமாக பச்சை மாவு தொட்டு சப்பாத்தி போல போட்டு ரொட்டியை எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது போட்டு வைத்துள்ள ரொட்டியை நாண் ஸ்டிக் (அ) சாதாரண தவாவில் போட்டு
இரு பக்கமும் வேக விட்டு வெந்ததும் வெண்ணெய் (அ) நெய் சேர்த்து சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
இந்த ரொட்டியுடன்(நாண்) சிறிது சவர்மாவை வைத்து சுருட்டி ஒரு டூத் பிக் கொண்டு குத்தி வைக்கவும்.
சுவையான சவர்மா தயார். இதை டின்னருக்கு செய்யலாம். பார்ட்டி டைம்களில் செய்தால் அனைவரின் பாராட்டுகளும் நிச்சயம் கிடைக்கும்.