சப்பாத்தி ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி மாவு - தேவைக்கு உப்பு - சிறிது எண்ணெய் - ஒரு தேக்கரண்டி ஸ்டஃபிங் தயாரிக்க: கொத்துக்கறி - 300 கிராம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய் சுரைக்காய் - ஒன்று வெங்காயம் - ஒன்று மட்டன் மசாலா - ஒரு கரண்டி கறி மசாலா - ஒரு கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி கெட்சப்

சில்லி சாஸ் - சிறிது சீஸ் - சிறிது லெட்யூஸ் இலை - சிறிது உப்பு - சிறிது

செய்முறை:

சப்பாத்தி மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். (இதில் ஃப்ரோசன் கறியை உபயோகித்துள்ளேன். ஃப்ரெஷ் கறியும் பயன்படுத்தலாம்).

வாணலியில் எண்ணெய் ஊற்றி கறியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

அதனுடன் குடை மிளகாய்

வெங்காயம்

சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.

பின் மசாலா வகைகள்

உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஸ்டஃபிங் தயார்.

பிசைந்து வைத்துள்ள மாவை சற்று மெல்லியதாக பெரிய சாப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும்.

பின் சப்பாத்தியை தவாவில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அதன்மீது பெரியவர்களுக்கெனில் சில்லி சாஸும்

குழந்தைகளுக்கெனில் கெட்சப்பும் தடவிக் கொள்ளவும்.

அதன்மேல் சிறிது ஸ்டஃபிங்கை வைக்கவும்.

பின் சிறிது சீஸ் வைக்கவும்.

சீஸின் மேல் சிறிது லெட்யூஸ் வைக்கவும்.

சப்பாத்தியின் இரண்டு ஓரங்களையும் இவ்வாறு மடிக்கவும்.

சப்பாத்தியை அப்படியே ரோல் செய்யவும்.

சுவையான சப்பாத்தி ரோல் தயார். இதை இரவு நேர உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது குழந்தைகளுக்கு லஞ்ச்சாகவோ கொடுக்கலாம். எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு இது.

குறிப்புகள்: