சப்பாத்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டாமா - 500 கிராம்

உப்பு - தேவையான அளவு

பால் - ஒரு மேசைக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

முட்டை - ஒன்று (விரும்பினால்)

கொதிநீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டாமா, உப்பு, பால், பட்டர், முட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.

குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும் .

அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் தடவவும். வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான (soft) சப்பாத்தி தயாராகிவிடும் .

இதனைப்போல மற்றைய சப்பாத்திளையும் தயார் செய்து பரிமாறவும் .

குறிப்புகள்:

சப்பாத்தி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுக்கூடியதும் சுவைவையானதும், கால்சியம், கார்போஹைட்ரேட், மினரல், உயிர்சத்துகள் நிறைந்ததும் ஆன ஓரு உணவு. (1)எச்சரிக்கை - இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். (2) மாற்று முறை - (a)(கொழுப்பு)(fat) பட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய் பாவிக்கலாம். (b)பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம். (3) கவனிக்க வேண்டிய விஷயங்கள் -(a)சப்பாத்திகள் நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும். (b) ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும், (c) பால் பட்டர், முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்தால் சப்பாத்தி மென்மையாக(soft) இருக்கும்.