சன்ஷைன் ஜுஸ்
தேவையான பொருட்கள்:
காரட் சாறு - அரை கப்
அன்னாசிப்பழ சாறு - அரை கப்
பச்சைவாழைப்பழம்(மசித்தது) - கால் கப்
மஞ்சள்வாழைப்பழம்(மசித்தது) - கால் கப்
ஆப்பிள் (ஆவியில் வேகவைத்து அரைத்தது) - ஒன்று
வெள்ளரிக்காய்சாறு - அரை கப்
தோடம்பழ(ஆரஞ்சுபழம்) சாறு - கால் கப்
தேசிக்காய்(எலுமிச்சம்பழம்)சாறு - அரை பாதி
வெள்ளைமிளகுத்தூள் - (1 -3) தேக்கரண்டி
தேன் - (2 - 4) தேக்கரண்டி
உப்பு - (1 -2) சிட்டிகை
சீனி(சர்க்கரை) - (100 - 200) கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் உப்பு, சீனியை(சர்க்கரையை) நன்றாக கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்திருக்கும் கலவையை(சீனி(சர்க்கரை)தண்ணீர்) ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி அதில் உள்ளவற்றை ஆற விடவும்.
ஆறிய பின்பு அதில் காரட் சாறு, அன்னாசிப்பழ சாறு, மசித்த வாழைப்பழம் (பச்சை,மஞ்சள்) அரைத்த ஆப்பிள், வெள்ளரிக்காய்சாறு, தோடம்பழச்சாறு ஆகியவற்றை நன்றாக கலக்கவும் .
பின்பு அதனுடன் தேன், தேசிக்காய்(எலுமிச்சம்பழம்)சாறு ஊற்றி வெள்ளைமிளகுத்தூள் போட்டு கலக்கவும்.
கலந்தவுடன் சன்ஷைன் ஜுஸ் தயாராகிவிடும். இதனை கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
சன்ஷைன் ஜுஸ் உடலுக்கு உற்சாகம், பலம் ஆகியவற்றை தரும், கண்ணுக்கு நல்லது, வைட்டமின் சத்துகள் A,B,C நிறைந்ததும், சுவையானதும், வெயில்காலத்திற்கு உகந்தது உடல் உஷ்ணத்தை குறைக்ககூடியதும் உங்கள் உடலை சூரியஒளியின் தாக்கத்திலிருந்து பாதுக்காக உதவுவதும் கரோட்டீன் சத்து நிறைந்ததும், குளிர்மையானதும் ஆகும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர், ஆப்பிள், அன்னாசி ஆகிய பழங்களின் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.