க்ரேப்
தேவையான பொருட்கள்:
மைதா - 100gm
முட்டை - 2
பால் - 1 1/4கப்
சர்க்கரை - 2tbsp
வெண்ணெய் - 2tbsp
சமையல் சோடா - 1/4tsp
வனிலா எசன்ஸ் - சில துளி
உப்பு = 1பின்ச்
செய்முறை:
மைதா மாவையும், சமையல் சோடாவையும் ஒன்றாக சேர்த்து சல்லடையில் சலித்து கொள்ளவும்.
சர்க்கரையை பாலில் கரைத்து அதோடு எசன்ஸை சேர்த்து கலக்கவும்.
முட்டையை லேசாக அடித்து இதையும். பாலில் சேர்த்து கலக்கவும்
மாவின் நடுவில் குழி செய்து வெண்ணெயை லேசாக உருக்கி ஊற்றவும்.
பால், முட்டை கலவையையும் ஊற்றி கட்டி முட்டி இல்லாமல் கலக்கவும்..
இதனை 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை வார்ப்பது போல் வார்த்து மிதமான தீயில் இரு புறமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
தேங்காய் சர்க்கரை ஒன்றாக கலந்தோ அல்லது பழங்களை பொடியாக நறுக்கி கலந்தோ க்ரேப்பின் நடுவில் வைத்து பறிமாறலாம்.