க்ரீமி பாஸ்தா
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1 கப் ( எதாவது ஒரு வகை)
பால் - 1 கப் + 2 தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
பார்மாஜன் சீஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது பாஸ்தாவை உப்புடன் சேர்த்து 8 - 10 நிமிடம் வரை வேக விடவும்.
பாஸ்தா வேகும் வரை ஒரு கடாயில் பாலினை ஊற்றி நன்றாக காய்ச்சவும்.
பின் மைதா மாவினை சிறிது பால் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது மைதா மாவு கரைசலை, பட்டருடன் சேர்த்து பாலில் ஊற்றி 5 நிமிடம் மைதா வாசம் போகும் வரை வேகவிடவும்.
பாஸ்தா வெந்த பிறகு அதனை வடிகட்டவும்.
பின்னர் பாஸ்தாவை பாலில் ஊற்றி கிளறி விடவும்.
இப்பொழுது மிகவும் எளிதில் செய்ய கூடிய கிரீமி பாஸ்தா ரெடி. இதனை பரிமாறும் பொழுது பார்மஜான் சீஸை பாஸ்தா மேல் தூவும்.