க்ரஞ்ச் டாகோ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டாகோ ஷெல் - ஒரு பாக்கெட் சீஸ் - ஒரு கப் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - ஒன்று லெட்யூஸ் - சிறியது ஒன்று ரீஃப்ரைட் பீன்ஸ் - ஒரு கேன் ஹாலப்பினோ பிக்கிள் - சிறிது பிகாந்தே சாஸ் - ஒரு கப் தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

வெங்காயம்

தக்காளி

லெட்யூஸ் முதலியவற்றை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும் சீரகத்தை அதில் போட்டு பொரிய விடவும்.

பொரிந்த சீரகத்துடன் டின்னில் இருக்கும் ரீஃப்ரைட் பீன்ஸை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு

பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

பாக்கெட்டில் இருக்கும் டாகோ ஷெல்களை எடுக்கவும். அதனுள் சிறிது சீஸ் பரவலாக வைக்கவும்.

சீஸ் வைக்கப்பட்ட டாகோ ஷெல்களை மைக்ரோ அவனில் 20 விநாடிகளுக்கு வைக்கவும்.

இப்போது ஷெல்களை வெளியில் எடுத்தால் சீஸ் சிறிது உருகி பரவியிருக்கும். உருகிய சீஸின் மேல் நறுக்கிய வெங்காயம்

தக்காளி

லெட்யூஸ் இவற்றை ஸ்டஃப் செய்யவும். இந்த ஸ்டஃப்ஃபிங் மேல் சிறிது சாஸ் பரவலாக ஊற்றவும். ஹாலப்பினோ பிக்கிள்ஸுடன் இந்த ஸ்டஃப்ட் டாகோ ஷெல்களை பரிமாறவும்.

குறிப்புகள்: