கோவா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - ஒரு சுண்டு

வெங்காயம் (பெரியது) - ஒன்று

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கோவா - சிறிதளவு

உள்ளி - ஒரு பல்

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பருப்புடன் உப்பு, கோவா, உள்ளி, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய வைக்க வேண்டும்.

மாவை சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். வடைகள் பொன்னிறமாக பொரிந்த பின்பு அதை எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கோவா வடை கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B5,B6,B9,C, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவுப்பொருள். எச்சரிக்கை - இருதய, சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.