கோவா ஆப்பிள் சாலட்
தேவையான பொருட்கள்:
கோவா (Cabbage) - பாதியளவு (வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் இருப்பது)
பச்சைநிற அப்பிள் - 1
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
ஒலிவ் ஓயில் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
எலுமிச்சைச்சாறு - ஒரு பாதி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோவாவை கழுவி பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய கோவாவுடன், மிளகுதூள், உப்பு, ஒலிவ் ஓயில் சேர்த்து கலந்து குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
ஆப்பிளைக் கழுவி தோலுடன் சேர்த்து மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பரிமாறும் போது வெளியில் எடுத்து பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெங்காயத்தைப் போட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் சாலட் சாஸ் சேர்த்தும் பரிமாறலாம். பச்சை நிற ஆப்பிள் தான் மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் அதில் புளிப்புச் சுவை கூடுதலாக இருக்கும். இது தனியாக சாலட்டாகவும் சாப்பிடலாம். பிரியாணி மற்றும் சோறு கறியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.