கோப்பித்தூள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோப்பி விதை(துப்பிரவு, கழுவி காயவைத்த) - 500 கிராம்

சீனி(சர்க்கரை) - 2 மேசைகரண்டி

பட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதில் கோப்பிவிதையை போட்டு நன்றாக (கோப்பி விதை கருகாமல்) வறுக்கவும்.

கோப்பி விதை நன்றாக வறுபட்டதும் அதில் சீனி (சர்க்கரை), பட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து விட்டு உடனடியாக இறக்கவும்.

நன்கு ஆறியபின்பு நன்றாக வறுத்த கோப்பி விதையை கிரைண்டரில் அரைத்து, அரிதட்டினாள் அரிக்கவும் (சலிக்கவும்).

அரிதட்டினாள் அரித்த(சலித்த)கோப்பித்தூளை காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து தேவையான போது தேவையான அளவில் எடுத்து பாவிக்கவும்.

குறிப்புகள்:

கோப்பியை குடிப்பதால் களைப்படைந்து காணப்படுகின்ற எமது உடல் புத்துணர்ச்சியை பெறுகிறது. அத்துடன் கோப்பியின் பிறப்பிடம் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா ஆகும். ஆகவே நீங்கள் சுத்தமான சுவையான கோப்பி தூளை தயாரித்து அதன் பின்பு சுத்தமான சுவையான கோப்பியை குடித்தால் களைப்படைந்து காணப்படும் உங்கள் உடல் புத்துணர்ச்சியை பெறும்.