கோப்தா க்ரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் கைமா - 1/4 கிலோ

கடலை மாவு- 1/4 கப்

பச்சை மிளகாய்-2

கொத்தமல்லி-சிறிதளவு

உப்பு-தேவைக்கு

எண்ணெய் -பொரிக்க + தாளிக்க

அன்னாசி பூ-1

வெங்காயம்-1

தனியா தூள்- 1 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

அரைத்தெடுக்க-

வெங்காயம்-2

சீரகம்-1 ஸ்பூன்

மிளகு -1 ஸ்பூன்

ஏலக்காய்-4

கிராம்பு-5

பட்டை-1

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவை வறுத்துக்கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

கைமாவை சுத்தம் செய்து நீரில்லாமல் வடித்துக்கொள்ளவும்.

பின்னர் மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை அடித்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு, அரைத்த விழுதில் பாதி, கடலை மாவு சேர்த்து கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.

கடைசியில் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் பொடியாக அரிந்து போடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கைமாவை உருண்டைகளாக உருட்டி போடவும்.

சிறுதீயில் முக்கால் பாகம் வேக வைத்து எடுக்கவும். கோப்தா தயார்.

அரைத்த விழுதில் இருக்கும் மீதி இருக்கும் விழுதில் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்

கடாயில் எண்ணெய் சிறிது விட்டு அன்னாசி பூ போடவும்.

பின் வெங்காயம் தாளிக்கவும்.

நன்கு சிவக்க பொரிந்ததும் கலந்து வைத்த விழுதை சேர்த்து விடாமல் கிளறவும் (மசாலா வாசனை நீங்க)

பின் பொடியாய் நறுக்கிய கொத்தமல்லி,தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் பொரித்த கோப்தாவை சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் மட்டும் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்:

பொதுவாக உத்திர பிரதேஷ உணவுகள் என்றாலே முகலாயர் உணவுகள் தான். கோப்தாவும் முகலாய உணவு. உ.பி முழுவதும் இது மிகவும் பிரபலம். கச்சு பெருநாள் அன்று கிடைக்கும் குர்பானி கறியில் ஒரே விதமாக செய்யாமல் இப்படி வித்தியாசமாக செய்வார்கள்.

இது நெய் சோறு இடியாப்பம், சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். விருப்பத்திற்கு தகுந்த மாதிரி நீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். க்ரேவியாக இருந்தால் தனி சுவை கொடுக்கும்