கோப்தா
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 1/4 கிலோ
கடலை மாவு- 1/4 கப்
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க தகுந்த அளவு
அரைத்தெடுக்க-
வெங்காயம்-2
சீரகம்-1 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
ஏலக்காய்-4
கிராம்பு-5
பட்டை-1
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
செய்முறை:
கடலை மாவை வறுத்துக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.
கைமாவை சுத்தம் செய்து நீரில்லாமல் வடித்துக்கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை அடித்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு, அரைத்த விழுது, கடலை மாவு சேர்த்து கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.
கடைசியில் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் பொடியாக அரிந்து போடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கைமாவை உருண்டைகளாக உருட்டி போடவும். சிறுதீயில் வைத்து நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்
குறிப்புகள்:
பொதுவாக உத்திர பிரதேஷ உணவுகள் என்றாலே முகலாயர் உணவுகள் தான். கோப்தாவும் முகலாய உணவு. உ.பி முழுவதும் இது மிகவும் பிரபலம். கச்சு பெருநாள் அன்று கிடைக்கும் குர்பானி கறியில் ஒரே விதமாக செய்யாமல் இப்படி வித்தியாசமாக செய்வார்கள்.