கோன் பலகாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மா - 2 கப்

பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

பட்டர் - 3 - 4 மேசைக்கரண்டி

உப்பு

கோன் அச்சு

எண்ணெய் - பொரிக்க

ஃபில்லிங்

காரம் : எதாவது பிடித்த கறி. பொதுவாக உருளைக்கிழங்கு/சோயா உருண்டை/வடகறி etc.

*

இனிப்பு:

ரவை - 1 கப்

பால் - 1 கப்

சீனி - 1/2கப்

கஜு(முந்திரி) - 20

ரெய்சின்/பேரீச்சம்பழம் -20

மஞ்சள் நிறம்

பட்டர்/நெய்- 4 மேசைக்கரண்டி

செய்முறை:

மாவினுள் பட்டர், உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும்.

பின்னர் அதனை சப்பாத்திக்கு தட்டுவதுபோல மெலிதாக நீளமக தட்டி கத்தியால் 1 அங்குல அகலமன நீள றிபன்களாக வெட்டவும்.

பின்னர் இந்த றிபன்களை கோன் அச்சில் அடியிலிருந்து (கோரான நுனியிலிருந்து) மேல்பாகம் வரை சுற்றவும் - ஐஸ்கிறீம் கோன் போல வரும்.

பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டி சிவக்க பொரிக்கவும். - பொரிக்கும் போது கோன் அச்சு தனியே கழன்று வரும். இதில் மீண்டும் மாவை வைத்து சுற்றலாம்.

இவ்வாறு முழு மாவையும் கோன்களாக செய்யவும்.

காரம்:

-----

இந்த கோன்களினுள் விரும்பிய கார ஃபில்லிங்கை வைத்து நிரப்பி கார சட்னி, கெட்சப் உடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

இனிப்பு:

-----

ரவையை வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.

பாலினுள் கஜு, வெட்டிய பேரீச்சம்பழம் அல்லது ரெய்சின், மஞ்சள் நிறம் சேத்து காய்ச்சவும்.

பால் கொதித்ததும் அதனுள் ரவையை போட்டு கிளறவும்.

ரவை வெந்ததும் அதனுள் சீனி, பட்டரை சேர்த்து கைவிடாது அல்வா பதத்திற்கு கிண்டி இறக்கவும்.

பின்னர் இதனை பொரித்த கோன்களில் வைத்து நிரப்பவும்.

சுவையான இனிப்பு கோன் பலகாரம் தயார்.

குறிப்புகள்:

கோன் அச்சு இல்லாவிட்டால் பெரிய அளவிலான பப்பா குழலை 4 - 5 அங்குல துண்டுகளாக வெட்டி அதிலும் மாவை சுற்றலாம்.