கோதுமை சாலட்
0
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை - 1 கப்
வெங்காயம் - 1
சிகப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் - 1
காரட் - 1
வெங்காய தாழ் - 3
எலுமிச்சை சாறு - 3tsp
ஆலிவ் எண்ணெய் - 6 tsp
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - காரத்திற்கேற்ப
செய்முறை:
கோதுமையை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து மீதமான தீயில் வேக வில்லா வேண்டும். இது வேக குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும்.
வெந்தபின் மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி கோதுமையை ஒரு பெரிய பௌலில் கொட்டவும்.
வெங்காயம், குடை மிளகாய் மற்றும் வெங்காய தாழை பொடியாக அறிந்து கொள்ளவும்.
வெங்காயத்தை இரண்டு ஸ்பூன் எண்ணையில் நிறம் மாறாமல் வதக்கி எடுத்து கொள்ளவும்.
கோதுமையுடன் ஆலிவ் எண்ணெய், வதக்கிய வெங்காயம், குடை மிளகாய், வெங்காய தாழ், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு அரை மணி நேரம் விடவும்.
இப்பொழுது சுவையான சாலட் ரெடி.