கோக்கனட் லைம் மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சர்க்கரை - 1/2 கப் - 3/4 கப் ஃப்ரெஷ் தேங்காய் துருவல் - கால் கப் வெண்ணெய் - கால் கப் முதல் தேங்காய் பால் - கால் கப் பசும்பால் - கால் கப்பில் பாதி முட்டை - ஒன்று லைம் சாறு - ஒரு மேசைக்கரண்டி ஃப்ராஸ்டிங் செய்ய: க்ரீம் சீஸ் மற்றும் வெண்ணெய் - தலா 100 கிராம் பவுடர்ட் சுகர் - 2 கப்புக்கு குறைவு எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து வைக்கவும். அவனை 180Cல் முற்சூடு செய்யவும்.
தேங்காயை துருவினாலும் சரி
இல்லை பின்னால் உள்ள ப்ரவுன் கலர் பகுதியை நீக்கி விட்டு மிக்சியில் சுற்றி எடுத்தாலும் சரி. அதை மாவுடன் கலந்து கொள்ளவும்.
சர்க்கரை
தேங்காய் பால்
பசும்பால்
உருக்கி ரூம் டெம்பரேச்சருக்கு வந்த வெண்ணெய் அனைத்தையும் ஒரு கப்பில் கலந்து கொள்ளவும். கையால் கலந்தால் போதுமானது. எலக்ட்ரிக் ப்ளெண்டர் பயன்படுத்த வேண்டாம்.
சர்க்கரை கரைந்த இந்த கலவையை மாவில் ஊற்றி லைம் ஜூஸும் கலந்து வைக்கவும்.
மஃபின் செய்யும் ட்ரேவில் லைனர் வைத்து கலவையை 3/4 பாகம் நிரப்பவும். இனி 20 - 30 நிமிடம் பேக் செய்யவும். டூத் பிக்கால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது எடுத்தால் சுவையான கோக்கனட் லைம் மஃபின்ஸ் தயார்.
ஃப்ராஸ்டிங் செய்ய வெண்ணெய் மற்றும் சீஸ் கலந்து ப்ளெண்டரில் சாஃப்டாக அடிக்கவும். இதில் சிறிது சிறிதாக பவுடர்ட் சுகர் சேர்த்து அடிக்கவும். குறைந்த ஸ்பீடில் அடித்தால் போதுமானது. சர்க்கரை அளவு பார்த்து நிறுத்தி விடவும். அதிகமானால் ஃப்ராஸ்டிங் பைப் செய்யும் போது தொடர்ச்சியாக வராமல் உடைந்து விழும். கடைசியாக லைம் ஜூஸ் கலந்து விடவும். இதை கேக் மேல் பைப் செய்யலாம்
அல்லது சாதாரணமாக பூசி விடலாம். மேலே விருப்பம் போல் அலங்கரிக்கவும்.
இவை சுவை சூப்பராக இருக்கும். ரொம்ப சாஃப்ட் & ஸ்பாஞ்சி. ஆனால் மேலே க்ரிஸ்பியாக இருக்கும். முட்டை சேர்ப்பதால் நன்றாக எழும்பி வரும். மிதமான சூடோடு சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.