கொய்யாப்பழ ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
கொய்யாப்பழம் (முற்றிய விதைகளற்ற) - ஒரு கப்
சீனி (சர்க்கரை) - சுவைக்கேற்ப
பால் - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
வனிலா - ஒரு தேக்கரண்டி
ஐஸ் கட்டி - ஒரு கப்
செய்முறை:
கொய்யாப்பழம், சீனி (சர்க்கரை), பால், தண்ணீர் வெனிலா ஐஸ்கட்டி இவையாவற்றையும் கிரைண்டரில் (மிக்ஸியில்)போட்டு நன்றாக அடிக்கவும்(அரைக்கவும்).
இதோ கொய்யாப்பழ ஜூஸ் தயாராகிவிட்டது. இதனை அழகான பூ போட்ட கிளாஸ்களில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
உயிர்சத்து சி நிறைந்த கொய்யாப்பழ ஜூஸ். கொய்யாப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி அருந்தவும்(குடிக்கவும்).