கொத்து ரோஷி
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி / ஃபுல்கா - 6 வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று இஞ்சி பூண்டு - சிறிது சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி கேரட்
பீன்ஸ் - சிறிது பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி முந்திரி - 5 கறிவேப்பிலை உப்பு
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெரிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்
இஞ்சி
பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள்
உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கசகசா மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி எடுத்து ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மீதமுள்ள் எண்ணெயை விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய கேரட்
பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். மூடி போட்டு லேசாக ஆவியில் காய்களை வேக விடவும்.
பின் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான வெஜிடபுள் கொத்து ரோஷி தயார்.