கொடித்தோடை சம்பல்
தேவையான பொருட்கள்:
கொடித்தோடை (Passion Fruit) இலைகள் - 30 (நடுத்தர அளவானவை) சிவப்பு வெங்காயம் - கால் பகுதி (அ) சின்ன வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி எலுமிச்சை - பாதி உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சுத்தமான நடுத்தர அளவான இளம் இலைகளாகத் தெரிந்து (இளம் இலைகளில் அதிகம் தூசு இராது.) ஈரத்துணியால் துடைத்து
நடு நரம்பை நீக்கி வைக்கவும். இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி
சுருட்டிப் பிடித்து மிக மெல்லிதாக அரிந்து கொள்ளவும். (இலைகளை அழுத்திப் பிடித்தால் சம்பலில் மெல்லிதாக கசப்புச் சுவை தலைகாட்டும்).
பச்சை மிளகாய்
வெங்காயத்தை மெல்லிதாக அரிந்து எடுக்கவும்.
இவை அனைத்துடனும் தேங்காய்த் துருவல்
உப்பு சேர்த்துப் பிசிறி எலுமிச்சையை பிழிந்து கலந்து விடவும். சுடு சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.