கேரமல் கஸ்டர்ட்(Flan)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால்(whole milk) - ஒரு கப் சர்க்கரை - கால் கப் முட்டை - 2 வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி ஜாதிக்காய்/nutmeg (துருவியது) - கால் தேக்கரண்டி

செய்முறை:

கால் கப் சர்க்கரையில் பாதியளவு எடுத்து

இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். சர்க்கரை பாகு

ப்ரவுன் நிறத்துக்கு வரும் வரை கிளறி கேரமல் தயாரித்துக் கொள்ளவும். தீய்ந்து விடாமல் கவனமாக செய்யவும்.

கஸ்டர்ட் செய்ய பயன்படுத்த போகும் அவன் சேஃப் கிண்ணங்களை வெண்ணெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும். அதில் கேரமல் ஊற்றி ஆற விடவும். சிறிது நேரத்தில் கேரமல் நன்கு கெட்டியாகிவிடும்.

மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்னர் பாலை சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஜாதிக்காய் துருவி சேர்க்கவும்.

கேரமல் ஊற்றி வைத்துள்ள கிண்ணங்களை ஒரு பேக்கிங் ட்ரேயில் வைத்து

பால்-முட்டை கலவையை (முக்கால் பங்கு) ஊற்றவும்.

இப்போது பேக்கிங் ட்ரேயில் கொதிக்கும் நீரை ஒரு இன்ச் அளவு நிரப்பவும்.

அவனை 375 F க்கு முற்சூடு செய்து கொண்டு

35 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். டூத் பிக் கொண்டு வெந்ததை உறுதி செய்து கொள்ளவும்.

அரை மணி நேரம் ஆறவிட்டு

ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கவும். அடிப்பகுதி ப்ரவுன் நிறமாகவும்

மேற்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும் அழகான ஃப்ளான் கிடைக்கும்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து

சர்விங் ப்ளேட்டில் கவிழ்த்து வைக்கவும். கேரமல் உருகி மேலே சிரப் போல கிடைக்கும். சுவையான

எளிதில் செய்யக்கூடிய கேரமல் கஸ்டர்ட் தயார்.

குறிப்புகள்: