கேரட் வெள்ளரி சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 1

சாலட் வெள்ளரி - 1

பச்சைமிளகாய் - 1

வேர்க்கடலை - 1/4 கப்

வினிகர் - 1 தேக்கரண்டி(optional)

சர்க்கரை - 1 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பச்சை மிளகாயை பொடியாகவும் கேரட், வெள்ளரியை தோல் சீவி 1 இன்ச் நீளத்திற்கு விரலளவு துண்டங்களாகவும் வெட்டி உப்பு சர்க்கரை, வினிகர், எலுமிச்சைச்சாறு கலந்து கிளறி வைக்கவும்.

வேர்க்கடலையை 1/2 தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து தோல் நீக்கி கரகரப்பாக பொடித்து வைக்கவும்.

சாலட் சாப்பிடும் முன் மேலே பொடித்த வேர்க்கடலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பெரிய துண்டுகளாக காய் சாப்பிட பிடிக்காதவர்கள் பொடியாக வெட்டிக் கொள்ளலாம். வினிகர் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம். எளிமையான சாலட் இது. சீன உணவகங்களில் பரிமாறப்படும் பக்க உணவுகளில் ஒன்று.