கேரட் துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - கால் கிலோ

இஞ்சி - ஒரு துண்டு

பச்சைமிளகாய் - 4

தேங்காய்ப்பூ - கால் கப்

கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கிய)

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - அரைப்பாதி

செய்முறை:

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், வெங்காயம் தாளிக்கவும். துருவிய கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, தேங்காய்ப்பூ, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பச்சையாக நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் தாளித்தவற்றையும் கலந்து தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கேரட் துவையல் கண்களுக்கு மிகவும் நல்லது. (1)தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்)பதிலாக பழப்புளி சேர்க்கலாம் (2)கேரட்டினை நாங்கள் உண்பதால் எமக்கு இன்சுலின் அதிகமாக சுரக்கும் ஆகவே சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.