கேரட் சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 200 கிராம்

வெங்காயம் (பெரிய ) - ஒன்று

பச்சை மிளகாய் - (2- 3)

ஊறுகாய் - ஒரு சிறிய துண்டு

தக்காளிப்பழம் - அரைப்பாகம்

மிளகு (தூள்) - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) - தேவையான அளவு

பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டினை கழுவி துருவவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளிப்பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்.

இவையாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஊறுகாய், உப்பு, மிளகுத்தூள், பால் அல்லது யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் ஜூஸ்) சேர்த்து கலக்கவும்.

கலக்கிய கலவையை 2 நிமிடங்கள் ஊற விடவும். இதோ சுவையான கேரட் சம்பல் தயார்.

குறிப்புகள்:

கேரட் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது எல்லாவகை சத்துகளும் அடங்கிய உணவு. இதில் மனித உடலுக்கு தேவையான சகல சத்துக்களும் அடங்கியுள்ளது. விரும்பினால் தக்காளிப்பழம் ,ஊறுகாய் இவையிரண்டையும் சேர்க்கலாம் அல்லது ஒன்றை சேர்க்கலாம் அல்லது ஒன்றையும் சேர்க்காமல் விடலாம் (சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்)