கேரட் இலை வறை
தேவையான பொருட்கள்:
கேரட் இலை - ஒரு கட்டு சின்ன வெங்காயம் - 8 காய்ந்த மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 கரண்டி தாளிக்க : கடுகு
சோம்பு
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கேரட் இலைகளை காம்பு நீக்கி தண்ணீரில் மண்
தூசி இல்லாமல் நான்கு அல்லது ஐந்து முறை நன்றாக அலசவும்
அலசிய கேரட் இலைகளை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம்
காய்ந்த மிளகாய்
சோம்பு
கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட் இலையை சேர்த்து பிரட்டவும்.
இலை ஓரளவிற்கு வதங்கியதும் உப்பு
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வதங்கியதும் இறக்கவும்
சுவையான கேரட் இலை வறை ரெடி